Wednesday, 19 March 2008

நடிகர் ரகுவரன் காலமானார் ‍ - 19/03/2008


குடி
தண்ணீர் இளநீர்
இவை இருக்க‌
பருகினாய் வேரு நீர்
அது நீரல்ல விஷம்
அறிவாய் நன்கு அறிவாய்
அறிந்து என்ன பயன் ?

சென்றாய் வெகுதூரம்
திரும்பி என்று வருவாயோ ?
நீ வருவாய். நாங்கள் இருப்போம்
உன் மகன் என்ன செய்வான் ?
அவனுக்கு நீ வேன்டாமா ?

என் நாட்டு குடிமகனே
குடிக்கு அடிமை நரனே
இன்று நீ இல்லை
ஒரு பக்கம் கோவம்
ஒரு பக்கம் சோகம்

உன் மகன் என்ன செய்வான் ?
வா அவன் முன். கேள் மன்னிப்பு

ஐயோ இது யார் குற்றம் ?
மனிதன், அரசாங்கம், கடவுள்

உன் மகன் என்ன செய்வான் ?
சிறு பிள்ளையடா அவன்
விதி. நீ நடித்து பழகிய காட்சி
இன்று நிஜமாகியது

இழந்தோம் ஒரு நடிகனை
இழந்தான் அவனோ தந்தயை
இரைவா. ஈசனே. காப்பாற்று.

No comments: